‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது. திருமணமான நான்கே மாதங்களில் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தததாக சமீபத்தில் அறிவித்தார் விக்னேஷ் சிவன். வாடகைத்தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றது தெரிய வந்தது. அதேசமயம் இவர்கள் விதிமுறைகளை மீறி குழந்தை பெற்றதாக சர்ச்சையும் எழுந்தது.
இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. ஆனால் இதையெல்லாம் இந்த தம்பதியர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எப்போதும் போல பேசுபவர்கள் பேசட்டும் என தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுகின்றனர். இன்று தீபாவளி. இதையொட்டி தங்களது இரட்டை குழந்தைகளுடன் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
இதுதொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் விக்னேஷ்சிவன். அதில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தங்களது குழந்தைகளை கையில் ஏந்தியபடி விக்னேஷ் சிவன் தீபாவளி வாழ்த்தை ஒவ்வொரு வார்த்தையாக சொல்ல சொல்ல, அதை நயன்தாராவும் திரும்ப சொல்லி வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதாவது இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதால் இப்படி ஒரு ஸ்டைலில் வாழ்த்து சொல்லி உள்ளனர். இந்த வீடியோ வைரலானது.




