ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி | இறுதிக்கட்டத்தில் 'கேர்ள் பிரண்ட்' : முதல் பாடல் வெளியீடு | புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ | 2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை |
விசாகபட்டினம் : ஆந்திர மாநில அமைச்சரும், நடிகையுமான ரோஜாவின் கார் மீது, விசாகபட்டினம் விமான நிலையத்தில் ஜனசேனா கட்சி தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு ராயலசீமா, கடலோர ஆந்திரா, வட ஆந்திரா ஆகிய மூன்று பகுதிகளுக்கும் சம வளர்ச்சி அளிக்கும் விதமாக மூன்று தலைநகர்களை அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு ஆதரவு தெரிவித்து சில அமைப்பினர் விசாகபட்டினத்தில் நேற்று முன்தினம் பேரணி நடத்தினர். இதில் பங்கேற்பதற்காக ஆளும் கட்சி சார்பில், அமைச்சர் ரோஜா உள்ளிட்ட தலைவர்கள் விசாகபட்டினத்திற்கு வந்தனர். திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டியும் வந்திருந்தார். அதேநேரத்தில், தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாணும் வேறு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விசாகபட்டினம் வந்தார்.
விமான நிலையத்திற்கு வெளியே ரோஜாவும், ஆளும் கட்சி நிர்வாகிகளும் வந்தபோது, அங்கு கூடியிருந்த ஜனசேனா கட்சியினர், அவர்களது கார்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ரோஜாவின் கார் டிரைவர் பலத்த காயமடைந்தார். கார்களும் சேதமடைந்தன. இதையடுத்து, ஜனசேனா கட்சியைச் சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, பவன் கல்யாண் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்ற போலீசார், அவர் அங்கிருந்து வெளியேற தடை விதித்தனர்.
இந்த தாக்குதல் குறித்து ரோஜா கூறியிருப்பதாவது: விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற விசாக கர்ஜனை பேரணி 100 சதவீதம் வெற்றி பெற்ற நிலையில், இதனை பொறுத்துக் கொள்ள முடியாத பவன் கல்யாண் ஆதரவாளர்கள் எங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு பயப்பட மாட்டோம். என்று கூறியிருக்கிறார்.