இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
வாரிசு படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 67வது படத்தில் கேங்ஸ்டர் கதையில் நடிக்கப் போகிறார் விஜய். இந்த படத்தில் அவருக்கு வில்லன்களாக அர்ஜுன், சஞ்சய் தத், பிருத்விராஜ், விஜய் சேதுபதி, கவுதம் மேனன் உட்பட பலர் நடிப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தில் ரோலக்ஸ் வேடத்தில் நடித்த சூர்யாவும் இந்த படத்தில் அதே ரோலக்ஸ் வேடத்தில் முக்கிய வில்லனாக சிறப்பு வேடத்தில் நடிக்கப்போவதாக ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு கமலின் விக்ரம் படத்தில் ஐந்து நிமிடங்கள் மட்டுமே சூர்யாவின் காட்சி இடம்பெற்ற நிலையில் விஜய் படத்தில் சற்று நீண்ட வேடமாக இருக்கும் என கூறப்படுகிறது.
அந்த வகையில், விஜய்யுடன் நேருக்கு நேர் என்ற படத்தில் அறிமுகமான சூர்யா, அதன் பிறகு பிரெண்ட்ஸ் படத்திலும் நடித்தவர். இப்போது மூன்றாவது முறையாக விஜய் 67 வது படத்தில் இணையப்போகிறார் என ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். ஆனால் இது எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை. படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத வரை இதுமாதிரியான தகவல்கள் அதிகம் உலா வரும் என்பதே உண்மை.