லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
மணிரத்னம் இயக்கத்தில் திரைக்கு வந்துள்ள பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத் தேவன் வேடத்தில் நடித்து பாராட்டுகளை பெற்று வருகிறார் கார்த்தி. அடுத்து பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சர்தார் படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படமும் தீபாவளியை முன்னிட்டு 21ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கார்த்தியின் சர்தார் படமும் அதே நாளில் வெளியாவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையில் ஏறு மயிலேறி என்றொரு நாட்டுப்புற பாடலை பின்னணி பாடி இருக்கிறார் கார்த்தி. இந்த பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது.