என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

தென்னிந்திய மொழிகளில் சினிமா மற்றும் சீரியல்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகர் அமித்பார்கவ். தவிர, டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் பல படங்களில் பணிபுரிந்துள்ளார். கடைசியாக ஜீ தமிழில் வெளியான திருமதி ஹிட்லர் என்ற தொடரில் நடித்து ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றிருந்தார். அதன்பிறகு புதிய ப்ராஜெக்ட் எதிலும் கமிட்டானதாக தெரியவில்லை. சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும் போதே பிட்னஸ் சேலஞ்ஜ் எடுத்துக்கொண்டு 3 மாதங்களில் உடம்பை ட்ரிம் செய்து அசத்தலான தோற்றத்திற்கு மாறினார். தற்போது தனது சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் பார்ப்பதற்கு செம ஹேண்ட்சம்மாக ஹீரோ லுக்கில் இருக்கிறார் அமித். இதனால் ரசிகர்கள் சிலர், 'என்ன சார் சினிமால ஹீரோ ஆகிட்டீங்களா? அதான் சீரியல் பக்கம் வர்றதில்லையா?' என ஆவலாக கேட்டு வருகின்றனர்.