ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மலையாளத்தில் உருவாகி உள்ள படம் ‛சாட்டர்டே நைட்'. நிவின் பாலி நாயகனாக நடித்துள்ளார். சானியா ஐயப்பன் நாயகியாக நடித்துள்ளார். ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கி உள்ளார். இந்த படத்தின் புரமோஷனுக்காக கோழிக்கோட்டில் ஒரு மாலில் நடிகர் நிவின் பாலி, நடிகைகள் சானியா ஐயப்பன், கிரேஸ் ஆண்டனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்களின் வருகையால் ஏகப்பட்ட ரசிகர்கள் அங்கு கூடிவிட்டனர். நிகழ்ச்சியை முடித்து திரும்பிய போது கூட்டத்தில் ரசிகர் ஒருவரை சானியா அடிக்க பாய்ந்த வீடியோ வைரலானது.
இதுபற்றி விளக்கமளித்துள்ள சானியா, ‛‛நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் கூட கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. என்னுடன் வந்த சக நடிகையிடம் சிலர் தவறாக நடந்தனர். கூட்ட நெரிசலால் அவர் எதிர்வினையாற்ற முடியாமல் சென்றுவிட்டார். நானும் அதுபோன்று எதிர்கொண்டேன். அதற்கு பதில் தான் அந்த வீடியோ'' என்றார்.