நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
சினிமா நட்சத்திரங்களின் ரசிகர்கள் பலரும் பலவிதமாக இருப்பார்கள். இப்போதெல்லாம் தங்கள் அபிமான நடிகர்கள், நடிகைகளுடன் செல்பி எடுக்க வேண்டும் என்பதுதான் பல ரசிகர்கள் ஆசையாக இருக்கிறது. அந்தக் காலத்தில் எல்லாம் ஆட்டோகிராப் தான் கேட்டு வாங்குவார்கள்.
ஆனால், ராஷ்மிகாவின் அதி தீவிர இளம் ரசிகர்கள் ஒருவர் இரண்டையும் செய்திருக்கிறார், கொஞ்சம் ஓவராக. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஷ்மிகாவிடம் ஒரு இளம் வாலிபர் செல்பி எடுக்க வேண்டுமெனக் கேட்க மறுக்காமல் அந்த அவருடன் செல்பி எடுத்துக் கொண்டார் ராஷ்மிகா. அடுத்ததாக தனது மார்பில் ராஷ்மிகாவின் ஆட்டோகிராப் வேண்டுமென்று அவர் கேட்டார். முதலில் அதிர்ச்சியடைந்த ராஷ்மிகா பின்னர் அந்த இளைஞர் அணிந்திருந்த டி-ஷர்ட்டில் தனது ஆட்டோகிராபை பதிவிட்டார்.
அதை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த புகைப்படக் கலைஞர்கள் அது பற்றி கேட்டதற்கு 'சோ க்யூட்' என சிரித்துக் கொண்டே சென்றார் ராஷ்மிகா.