இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
பிரபல இயக்குனர் செல்வராகவன் தனது சகோதரர் தனுஷை வைத்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களையும் , 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். நடிகர் சூர்யாவை வைத்து என்ஜிகே திரைப்படத்தை இயக்கிய இவர் தற்போது நடிகர் தனுஷை வைத்து நானே வருவேன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் வருகிற 29ம் தேதி ரிலீசாகிறது.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இயக்குனர் செல்வராகவன் வீட்டிற்கு சென்றுள்ளார். இது குறித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள இயக்குனர் செல்வராகவன், தமிழக முதல்வர் எங்கள் வீட்டிற்கு வருகை தந்தது மகிழ்ச்சியான தருணம் என்று குறிப்பிட்டு புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். தற்போது இந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.