ரூ.151 கோடியைக் கடந்த 'கூலி' முதல்நாள் வசூல் : லியோ சாதனை முறியடிப்பு | இளையராஜா, வைரமுத்து பிரிவுக்கு காரணம் இதுதான் : கங்கை அமரன் பரபரப்பு பேச்சு | நடிகை கஸ்தூரி பா.ஜ.,வில் இணைந்தார் | ‛அபூர்வ ராகங்கள்' தந்த ‛அபூர்வ' மனிதர் ரஜினி : 50 ஆண்டுகளை கடந்தும் நிற்கும் 'அதிசய' நாயகன் | 33 ஆண்டுகளை நிறைவு செய்த ஏஆர் ரஹ்மான் | விமர்சனங்களில் பின்னடைவைச் சந்திக்கும் 'வார் 2' | அமெரிக்காவில் 4 மில்லியன் வசூலை நெருங்கும் 'கூலி' | 50 ஆண்டுகள்... தமிழ் சினிமாவின் 'ராஜா' ரஜினிகாந்த் | இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி |
1994ம் ஆண்டு மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றவர் இந்தியாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய். அதற்குப் பிறகுதான் உலக அழகிப் பட்டங்கள் பற்றி இந்தியாவில் மூலை முடுக்குகளில் எல்லாம் தெரிய வந்தது. எப்படியும் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் என்று அப்போதே பேசப்பட்டது. ஆனால், ஹிந்திப் படத்தில் அறிமுகமாகாமல் தமிழ்ப் படத்தில் அறிமுகம் ஆவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
1997ல் மணிரத்னம் இயக்கத்தில் மோகன்லால், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடிக்க, எம்ஜிஆர் - கருணாநிதி பற்றிய படம் என்று பேசப்பட்ட 'இருவர்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் ஐஸ்வர்யா ராய். அந்தப் படம் கமர்ஷியல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் ஐஸ்வர்யாவிற்கு ஒரு அற்புதமான அறிமுகப் படமாக அமைந்தது. அதற்குப் பிறகு ஹிந்திப் படங்களிலும் நடிக்க ஆரம்பித்து பல வெற்றிப் படங்களில் பங்கேற்றார் ஐஸ்வர்யா ராய்.
ஹிந்தி தவிர மற்ற மொழிகளில் நடிக்க வேண்டுமென்றால் தமிழ்ப் படங்களில் நடிக்கவே அவர் அதிக ஆர்வம் காட்டினார். வேறு எந்த தென்னிந்திய மொழிகளிலும் அவர் நடிக்கவில்லை. 1998ல் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 'ஜீன்ஸ்', 2000ம் ஆண்டில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்', 2010ல் மணிரத்னம் இயக்கத்தில் 'ராவணன்', ஷங்கர் இயக்கத்தில் 'எந்திரன்' என அவரது ஒவ்வொரு தமிழ்ப் படமும், அதில் அவர் நடித்த கதாபாத்திரங்களும் அவரைப் பற்றிப் பேச வைத்தது.
25 வருடங்களுக்கும் மேலாக தமிழிலும் கதாநாயகியாக இருக்கும் ஐஸ்வர்யா ராய் 12 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடித்துள்ள படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் மிக முக்கியக் கதாபாத்திரமான நந்தினி கதாபாத்திரம், மற்றும் மந்தாகினி தேவி கதாபாத்திரம் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். படத்தின் முதல் பார்வை போஸ்டர் வந்ததிலிருந்தே ஐஸ்வர்யாவைப் பற்றிய பேச்சுக்கள் ஆரம்பமாகிவிட்டன. அதற்குப் பிறகு வந்த பல வீடியோக்கள், போஸ்டர்கள் அந்தக் கதாபாத்திரங்களில் ஐஸ்வர்யா மிகப் பொருத்தமாக நடித்திருப்பார் என்பதை ஐயமில்லாமல் சொல்கின்றன.
'பொன்னியின் செல்வன்' படத்தை சினிமா ரசிகர்கள் எதிர்பார்ப்பது போலவே ஐஸ்வர்யா ராயும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். திரையில் நிச்சயம் ஒரு மேஜிக்கை அவர் நிகழ்த்தியிருப்பார் என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.