குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
தற்போது சுராஜ் இயக்கி உள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ள வடிவேலு, அதையடுத்து உதயநிதி நடித்துள்ள மாமன்னன், பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் சந்திரமுக-2 ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்ற வடிவேலு, மீடியாக்களை சந்தித்துள்ளார்.
அப்போது, தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ஹீரோவாகவும், மாமன்னனில் குணச்சித்திர வேடத்திலும், சந்திரமுகி-2வில் காமெடி வேடத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்த படங்களில் மக்கள் எதிர்பார்க்கும் காமெடிகள் இன்னும் அதிகமாக இருக்கும். அதோடு, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் பின்னணியும் பாடியிருக்கிறேன். அந்த பாடல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெரும் என்று தெரிவித்திருக்கும் வடிவேலு, ஏற்கனவே என்னுடன் நடித்த நடிகர்களுக்கு ஏற்ற காமெடி டிராக் தற்போது இல்லாததால் மீண்டும் அவர்களுடன் சேர்ந்து நடிக்க இயலவில்லை. அதோடு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணிக்கு கண்டிப்பாக என்னால் இயன்ற உதவி செய்வேன் என்றும் வடிவேலு தெரிவித்திருக்கிறார்.