புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கன்னட திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் புனித் ராஜ்குமார். கடந்த வருடம் இவரது திடீர் மறைவு இந்திய திரை உலகிற்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. மொழி பேதம் பாராமல் அனைத்து திரையுலகையும் சேர்ந்த பிரபலங்கள் பலரும் அவருக்கு நேரில் சென்று தங்களது அஞ்சலியை செலுத்தி வந்தனர். இந்தநிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தவர்களுக்கு புனித் ராஜ்குமார் உருவம் பதித்த வெள்ளி நாணயம் ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ள தகவல் நடிகர் விக்ரம் பிரபு மூலமாக வெளியாகி உள்ளது.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக பெங்களூரில் இருந்து வந்திருந்த கன்னட நிகழ்ச்சி தொகுப்பாளர் அனுஸ்ரீ என்பவர் புனித் ராஜ்குமார் உருவம் பொறித்த வெள்ளி நாணயங்களை பொன்னியின் செல்வன் படக்குழுவினருக்கு பரிசாக வழங்கியுள்ளார். கன்னட திரை உலகம் சார்பாக இந்த பரிசை அனுஸ்ரீ மூலமாக கொடுத்து வழங்க செய்துள்ளார்கள்.
இது பற்றி விக்ரம் பிரபு கூறும்போது "பொன்னியின் செல்வன் புரமோஷன் நிகழ்ச்சியின்போது கன்னட திரையுலகம் சார்பாக அப்பு அண்ணாவின் உருவம் பொறித்த வெள்ளி நாணயத்தை கன்னட தொகுப்பாளர் அனுஶ்ரீயும் அவரது குழுவினரும் வழங்கியது மிகப்பெரிய கௌரவமாக அமைந்தது. இதை பெறும்போது ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டேன். எவ்வளவு அற்புதமான மனிதர்.. அவரது அன்பு இப்போதும் எங்களுடன் தொடர்கிறது" என்று கூறியுள்ளார்.