கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு |

கவுதம் மேனன் இயக்கத்தில் கிட்டத்தட்ட நான்கு வருடத்திற்கு பிறகு தற்போது வெளியாகி உள்ள படம் வெந்து தணிந்தது காடு. சிம்பு கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு பெரிய அளவில் பாசிட்டிவான விமர்சனங்களை வந்துள்ள நிலையில் இந்த படத்தின் வெற்றி சந்திப்பு நிகழ்வையும் சமீபத்தில் படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். தெலுங்கில் லைப் ஆப் முத்து என்கிற பெயரில் இந்த படம் வெளியாகி அங்கேயும் வரவேற்பை பெற்றுள்ளது.
தெலுங்கு புரொமோஷன் நிகழ்ச்சியில் தெலுங்கு தொகுப்பாளர் ஒருவர் கவுதம் மேனனிடம் கேள்வி கேட்கும்போது தவறுதலாக மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்தை மனதில் நினைத்துக் கொண்டு சிம்பு, விஜய்சேதுபதி இவர்களை எல்லாம் ஒன்றாக இணைத்து படம் இயக்கிய அனுபவம் எப்படி இருந்தது என்று கேட்டார்.
ஆனால் கவுதம் மேனன் இதுபற்றி சற்றும் அலட்டிக்கொள்ளாமல் உடனே மணிரத்னமாக மாறி, சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய், அரவிந்த்சாமி என அனைவரையும் ஒரே பிரேமில் வைத்து இயக்குவது சவாலான விஷயம் தான் என்றாலும் மணிரத்னமாக இருந்ததால் அதை இயக்குவது சுலபமாக இருந்தது என்று பதில் அளித்தார்.
இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. தவறுதலாக கேள்வி கேட்ட தொகுப்பாளரை கோபித்துக்கொள்ளாமல் அதேசமயம் சற்று நையாண்டியுடன் இந்த கேள்விக்கு இயக்குனர் கவுதம் மேனன் பதில் சொன்னது நெட்டிசன்கள் பலரிடமும் பாராட்டை பெற்று வருகிறது.