நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

2022ம் ஆண்டின் முக்கால் பாகத்தைக் கடக்க உள்ளோம். இந்த மாதக் கடைசியில் 'பொன்னியின் செல்வன், நானே வருவேன்' என இரண்டு பெரிய படங்கள் வெளிவர உள்ளது. அதனால், அப்படங்களுடன் போட்டி போடுவதைத் தவிர்க்க, இந்த வாரம் செப்டம்பர் 23ம் தேதியன்று ஏழு படங்கள் வெளியாக உள்ளன.
“ஆதார், பபூன், ட்ராமா, கெத்துல, குழலி, ரெண்டகம், ட்ரிகர்,” ஆகிய படங்கள்தான் இந்த வாரத்தில் போட்டியிட உள்ளன. கொரோனா தாக்கத்தால் கடந்த இரண்டு வருடங்களாகவே பட வெளியீடுகள் தாறுமாறாக மாறி உள்ளன. ஒரு பக்கம் சிறிய படங்களக்குத் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல், மறு பக்கம் ஓடிடி பக்கமும் நல்ல விலையில்லை என்ற காரணத்தால் சிறிய படங்கள்தான் அதிக சிக்கலை சந்திக்கின்றன.
இந்த வாரம் வெளியாக உள்ள ஏழு படங்களில் பெரிய நடிகர்களின் படங்கள் என்று எந்தப் படத்தையும் குறிப்பிட முடியாது. அதர்வா நடித்துள்ள 'ட்ரிகர்', அரவிந்த்சாமி நடித்துள்ள 'ரெண்டகம்', வைபவ் நடித்துள்ள 'பபூன்', கருணாஸ் நடித்துள்ள 'ஆதார்' ஆகியவை ஓரளவிற்குத் தெரிந்த நடிகர்கள் நடித்துள்ள படங்கள். 'ட்ராமா, கெத்துல, குழலி,' ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு அதிகம் தெரிந்திராத நடிகர்கள், புதுமுகங்கள் நடித்துள்ள படங்கள்.
இந்தப் படங்களுக்கு குறிப்பிட்ட அளவில் தியேட்டர்கள் கிடைத்து, வேறு எந்த சிக்கலும் இல்லாமல் இருந்தால் ஏற்கெனவே அறிவித்தபடி வெளியாகலாம். இல்லையென்றால் கடைசி நேரத்தில் எந்த மாறுதலும் வரலாம்.