கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு | 'மிஸ்டர் ஜூ கீப்பர், அடங்காதே' இந்தமுறையாவது சொன்னபடி வெளியாகுமா? | வடிவேலுக்கு இந்த நிலையா?: மாரீசன் காட்சிகள் ரத்தான பரிதாபம் | திருமணம் எப்போது? விஜய்தேவரகொண்டா பதில் இதுதான் | சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி |
3 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்ற படம் ஜீவி. வெற்றி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்திருந்தார். இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் ஜீவி-2 என்கிற பெயரில் உருவாகி கடந்த மாதம் ஓடிடி தளத்தில் வெளியானது.
முதல் பாகத்தில் இடம்பெற்ற அதே கலைஞர்கள், தொழில்நுட்ப குழுவினர் என பலரும் இந்தப்படத்திலும் நடித்திருந்தனர். குறிப்பாக இந்தப்படத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்திருந்தார். அஸ்வினி சந்திரசேகர் ஆர்க்கிடெக் படித்திருந்தாலும் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் சினிமாவுக்குள் நுழைந்தவர். முறைப்படி கிளாசிக் டான்ஸ் கற்றவர். தமிழில் மெர்லின், கால் டாக்சி, மரகதக்காடு, காதல் புதிது ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் கன்னடம், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் மலையாளத்தில் நிவின்பாலியுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். மிகுதியாக எதிர்பார்த்த ஜீவி 2 படம் ஓடிடியில் வெளியானது தனக்கு வருத்தம் என்று அஸ்வினி கூறியுள்ளார்.
ஜீவி-2 படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார் அஸ்வினி சந்திரசேகர். அவர் கூறியதாவது: ஜீவி திரைப்படம் எனக்கு தமிழில் நல்ல ஒரு என்ட்ரி ஆக அமைந்துவிட்டது. ஆடிஷன் மூலமாகததான் ஜீவி பட வாய்ப்பு கிடைத்தது. அப்போது என் முன் இரண்டு கதாபாத்திரங்கள் இருந்தன. அதில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி கேரக்டரை தேர்வு செய்தேன். ஆனால் அதில் நடிப்பது சவாலாக இருந்தது. இயக்குநர் கொடுத்த ஆலோசனைகளையும், நிஜத்தில் நான் பார்த்த சிலரையும் மனதில் வைத்து அந்த கதாபாத்திரத்தில் நடித்தேன்.
இரண்டாம் பாகத்தில் எனக்கு அந்த கதாபாத்திரத்தில் நடிப்பது பழக்கமாகி விட்டது. சொல்லப்போனால் இதில் அந்த கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் செய்து நடித்துள்ளேன். முதல் பாகத்தில் எனது போர்ஷன் கொஞ்சம் குறைவு தான். காரணம் கதை பல கதாபாத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து சுற்றி வந்தது. ஆனால் இரண்டாம் பாகத்தில் எனது கதாபாத்திரம் படம் முழுவதும் வரும் விதமாக கதை அமைந்துள்ளது. முதல் பாகத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என படத்தில் நடித்த சமயத்தில் நாங்கள் எதிர்பார்க்கவில்லை.அதிலும் இரண்டாம் பாகம் உருவாகும் என்றெல்லாம் நினைத்தே பார்க்கவில்லை.. எல்லாம் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.
முதல் பாகத்தில் பணியாற்றிய அதே டீம் என்பதால் ஒரு குடும்பத்தில் இருப்பது போன்ற உணர்வுதான் ஏற்பட்டது. ரோகிணி, ரமா, மைம் கோபி, கருணாகரன் என சீனியர் நடிகர்களுடன் இணைந்து நடித்ததில் நிறைய விசயங்களை கற்றுக்கொள்ள முடிந்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் தான். இரண்டாம் பாகம் தியேட்டரில் ரிலீஸ் ஆகவில்லை என்பதில் கொஞ்சம் வருத்தம் தான். அதேசமயம் ஒடிடியில் ரிலீஸானாதால் உலகம் முழுக்க அதிக அளவிலான ரசிகர்கள் இந்தப்படத்தை பார்த்திருக்கிறார்கள் என நினைக்கும்போது இன்னொரு பக்கம் மகிழ்சியாகவும் இருக்கிறது. என்கிறார் அஸ்வினி சந்திரசேகர்.