நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
சிம்பு நடிப்பில் தயாரான 'ஈஸ்வரன்', ஜெய், பாரதிராஜா நடிப்பில் தயாரான 'குற்றம் குற்றமே' ஆகிய படங்களையும், ஆஹா ஓடிடி தளத்தில் வெளியான 'குத்துப் பத்து' எனும் தொடரையும் தயாரித்த டி கம்பெனி நிறுவனம் அடுத்து ஓடிடி தளத்திற்கென்றே ஒரு படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்தில் காயத்ரியும், அபர்ணதியும் இணைந்து நடிக்கிறார்கள். அறிமுக இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில், சார்லி, சேதுபதி படங்களில் நடித்த லிங்கா, விவேக் பிரசன்னா, கே.பி.ஒய். தீனா, நக்கலைட்ஸ் தனம் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சக்தி பாலாஜி இசையமைக்கிறார்.
காயத்ரி தற்போது பஹீரா, இடிமுழக்கம், காயல் படங்களில் நடித்து வருகிறார். எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபர்ணதி, தேன், ஜெயில் படங்களுக்கு பிறகு இந்த படத்தில் காயத்ரியுடன் இணைந்துள்ளார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.