100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி |
சினிமாவில் கதாநாயகிகள் கிளாமர் காட்டினால்தான் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற முடியும் என்று சிலர் சொல்வார்கள். ஆனால், துளி கூட கிளாமர் காட்டாத கதாநாயகிகளும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார்கள் என்பது வரலாறு. சமீப காலங்களில் ஓரளவுக்காவது கிளாமர் காட்ட வேண்டும் என்று சில முன்னணி நடிகைகளும் முடிவு செய்துவிட்டார்கள். அதற்குக் காரணம் சமூக வலைத்தளங்கள்.
கிளாமரான புகைப்படங்களைப் பகிரும் நடிகைகளுக்கு அதிகமான லைக்குகள் கிடைக்கின்றன. அதை வைத்தே ரசிகர்கள் எதை விரும்புகிறார்கள் என்பது தெரிந்துவிடுகிறது. தற்போதைய நடிகைகளில் அதிகம் கிளாமர் காட்டாத ஒரு நடிகையாக கீர்த்தி சுரேஷ் இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ்.
சமீபத்தில் அவர் பகிர்ந்த போட்டோஷுட் புகைப்படங்கள் கொஞ்சம் கிளாமராகவே இருக்கிறது. நீள கவுன் ஒன்றின் இரண்டு பக்கங்களிலும் டிரான்ஸ்பரன்ட்டான இடைவெளி தோலின் நிறத்திலேயே உள்ளது. இன்ஸ்டாவில் அவர் வெளியிட்ட புகைப்படங்களைப் பார்த்து அதுவே கிளாமர்தான் என ரசிகர்கள் ஒரு மில்லியனுக்கும் மேல் லைக் செய்துள்ளார்கள்.