'சாயரா' இந்தியாவில் நிகர வசூல் 250 கோடி | 'அவதார் - பயர் அண்ட் ஆஷ்' டிரைலர் ரிலீஸ் | ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? |
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‛காபி வித் காதல்'. ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா, யோகிபாபு, திவ்யதர்ஷினி, ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காதலும், காமெடியும் கலந்து உருவாகி உள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே இரண்டு, மூன்று பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதிலும் ‛மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் இடம் பெற்ற ரம் பம் பம் ஆரம்பம் பாடலை மீண்டும் ரீ-கிரியேட் செய்து வெளியிட்டனர். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வந்தன. தற்போது ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி அக்.,7ல் படம் தியேட்டர்களில் வெளியாகிறது. இதனை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றி தமிழகத்தில் வெளியிடுகிறது.