கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா மற்றும் பலர் நடித்துள்ள சரித்திரப் படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் முதல் பாகம் அடுத்த மாதம் செப்டம்பர் 30ம் தேதியன்று வெளியாக உள்ளது.
தமிழில் தயாராகி இருந்தாலும் பான் இந்தியா படமாக இப்படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. படத்தை 'ஐமேக்ஸ்' வடிவிலும் திரையிட உள்ளதாக தற்போது அறிவித்துள்ளார்கள். தமிழில் 'ஐமேக்ஸ்' வடிவில் வெளியாகும் முதல் திரைப்படம் இதுதான்.
'ஐமேக்ஸ்' வடிவில் படங்களைத் திரையிட பிரத்யேகமான தியேட்டர்கள், திரைகள் இருக்கின்றன. வழக்கமான திரைகளின் அளவை விட ஐமேக்ஸ் திரைகளின் அளவு பெரிதாக இருக்கும். உலகத்திலேயே பெரிய ஐமேக்ஸ் தியேட்டராக ஜெர்மனியில் 44 மீட்டர் அகலம், 23 மீட்டர் உயரம் கொண்ட தியேட்டர் உள்ளது. 1.43 : 1 என்ற விகிதத்தில் படங்கள் திரையிடப்படும்.
'பொன்னியின் செல்வன்' மாதிரியான பிரம்மாண்டப் படங்களை ஐமேக்ஸ் தியேட்டர்களில் பார்ப்பது தனி அனுபவமாக இருக்கும்.