காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் விஜய். அவருடன் ரஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, சங்கீதா உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்று வருகிறது. இங்கு விஜய் நடிக்கும் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்படுகிறது. அதன் பிறகு சென்னை, ஐதராபாத் ஆக இரண்டு லொகேஷன்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள வம்சி பைடிபள்ளி இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் வாரிசு படத்தின் மொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில் தற்போது விஜய் 67வது படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்து விட்ட லோகேஷ் கனகராஜ், லொகேஷன் பார்க்கும் பணிகளில் தீவிரம் அடைந்துள்ளார். விஜய் 67 வது படத்தின் படப்பிடிப்பை நவம்பர் அல்லது டிசம்பரில் தொடங்க திட்டமிட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.