காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
தமிழ் சினிமாவில் தற்போதுள்ள அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைக்கும் அளவுக்கு எப்போதும் பிஸியாகவே இருக்கிறார் இசையமைப்பாளர் டி இமான். தனது படங்களில் பாடல்களை எப்படியேனும் ஹிட்டாக்கி விட வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டு வரும் இமான், அதற்காக புதுப்புது விஷயங்களை கையாண்டு வருகிறார். அதுமட்டுமல்ல பல புதிய பாடகர்களையும் அறிமுகப்படுத்தி வருகிறார்.
ஏற்கனவே வைக்கம் விஜயலட்சுமி, நொச்சிப்பட்டி திருமூர்த்தி ஆகியோரை அறிமுகப்படுத்திய இமான், தற்போது வெளியாகியுள்ள பொய்க்கால் குதிரை என்கிற படத்தில் இலங்கை பாடகி ஆஸ்னா என்பவரை அறிமுகப்படுத்தியிருந்தார் டி.இமான். இந்த நிலையில் பப்ளிக் என்கிற படத்தில் தேவகோட்டை அபிராமி என்பவரை பாடகியாக அறிமுகப்படுத்தியுள்ளார். இதுகுறித்த தகவலையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தெரியப்படுத்தியுள்ளார் டி இமான்.