15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கதை நாயகனாக நடிக்கும் மிஷ்கின் | ஹீரோவானார் பிக்பாஸ் விக்ரமன் | தமிழ் படத்தில் வில்லனாக நடிக்கும் சிராக் ஜானி | பிளாஷ்பேக் : சிவாஜி பட ரீமேக்கில் கமல் | பிளாஷ்பேக் : பானுமதிக்கு ஜோடியாக நடித்த தங்கவேலு | விஜய் பிரியா விடை கொடுப்பாரா?, பிரிவு உபசார விழா நடக்குமா? | விஜயை விமர்சித்த நடிகையின் அனலி பட ரிசல்ட்? | சூரி படத்தின் பட்ஜெட் 75 கோடியா? | பத்து கோடியை தொட்ட சிறை | ஜனநாயகன் டிக்கெட் புக்கிங் எப்போது தெரியுமா? |

தென்னிந்திய மொழிகளில் பிரபலமான ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன். சில படங்களில் நடித்தும் உள்ளார். இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார பயணம் கடந்த ஒரு மாதமாக இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுக்க நடந்தது. இதன் நிறைவு விழா சென்னை அருகே நடந்தது. இந்தக்கூட்டத்தில் கனல் கண்ணன் கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறுகையில், ‛‛இந்துவாக இருப்பதே பெருமை. ஒருகாலத்தில் வாள் எடுத்து சண்டை போட்டு நாடுகளை பிடித்தனர். இப்போது மதமாற்றம் என்ற பெயரில் நாடுகளை பிடிக்கின்றனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பேர் தரிசனம் செய்கின்றனர். அப்படி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது எதிரே கடவுள் இல்லை(ஈ.வே.ராமசாமி) என்று சொன்னவரின் சிலை இருக்கிறது. அந்த சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்று தான் இந்துக்களின் எழுச்சி நாள்'' என்றார்.
கனல் கண்ணன் குறிப்பிட்ட ஸ்ரீரங்கம் கோயிலின் முன்பு ஈ.வே.ராமசாமி சிலை உள்ளது. அதை உடைக்க வேண்டும் என அவர் பேசியது சர்ச்சையாகி உள்ளது.