தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் வெளியிட்ட நிர்வாண போட்டோக்கள் மிகப் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதையடுத்து அவர் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. என்றாலும் பாலிவுட் சினிமாவை சேர்ந்த திரைப்பிரபலங்கள் ரன்வீர் சிங்குக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். குறிப்பாக நடிகைகளும் இவரின் போட்டோ ஷூட்டிற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்தநிலையில் பாலிவுட் நடிகையான ராக்கி சாவந்த் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வீடியோவில், ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோ சூட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ள அவர், நிர்வாண போஸ் கொடுத்து நம் நாட்டு பெண்களுக்கு ரன்வீர் சிங் நல்லது செய்து இருக்கிறார். அவர் தொடர்ந்து நிர்வாண போட்டோ சூட் நடத்த வேண்டும். அவரை அப்படி பார்க்கதான் நான் ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்து இருக்கிறார் ராக்கி சாவந்த். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.