மார்கோ-2வை ஒதுக்கி வைத்துவிட்டு மம்முட்டி படத்தை அறிவித்த தயாரிப்பாளர் | தனுஷ், கார்த்தி இல்லாமல் இரண்டாம் பாகமா ? ; செல்வராகவன் பதில் | 'ஆர்யன்' படத்தில் 'கண்ணூர் ஸ்குவாட்' இன்ஸ்பிரேஷன் ; மனம் திறந்த விஷ்ணு விஷால் | நடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | மீண்டும் அதிக வெளியீடுகள் ஆரம்பம்… | கோயிலில் 'தல…தல' என்ற ரசிகர்கள்: 'வேண்டாம்' என சைகை செய்த அஜித் | ஓடிடி ரிலீஸ் : 1000 கோடியைத் தவறவிடும் 'காந்தாரா சாப்டர் 1' | அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? |

ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தின் ஓடிடி உரிமையை விற்கும் போது ஹிந்தி உரிமையை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனத்திற்கும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய உரிமையை 'ஜீ 5' நிறுவனத்திற்கும் விற்றார்கள்.
இந்நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள பதிப்புகள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்திலும் நேற்று முதல் தனது ஒளிபரப்பை ஆரம்பித்தது. முதலில் ஜீ 5 நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட இந்த நான்கு மொழி உரிமைகளும் மற்றுமொரு போட்டி நிறுவனத்திற்கும் மாறியது குறித்து திரையுலகில் அதிர்ச்சியும் சர்ச்சையும் எழுந்தது.
முதலில் உரிமையை வாங்கிய ஜீ 5 நிறுவனம் தான் தனது உரிமைகளை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கும் 'ஷேர்' செய்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த 'ஷேர்' உரிமை விற்பனை மூலம் அந்த நிறுவனம் மேலும் சில பல கோடிகளைப் பெற்றுள்ளதாம். இந்த 'ஷேர்' உரிமை விற்பனையால் படத்தின் தயாரிப்பாளருக்கு எந்த வருமானமும் இல்லையாம்.
எனவே, இனி வரும் காலங்களில் ஓடிடி உரிமைகளுக்காகப் போடப்படும் ஒப்பந்தங்களில் சில மாற்றங்களைச் செய்தாக வேண்டும் என தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளார்களாம். அப்படி மாற்றி விற்கும் போது தயாரிப்பாளர்களுக்கும் வருமானம் வரும் வகையில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என பல தயாரிப்பாளர்கள் பேசி வருகிறார்களாம்.