ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை |
சின்னத்திரை வரலாற்றில் இதுவரை பார்த்திராத அளவில் 4 மணி நேர சீரியல் கிளைமாக்ஸ் ஜீ தமிழில் ஒளிபரப்ப உள்ளனர். ஜீ தமிழின் நம்பர் 1 சீரியலாக பிரபலமான 'செம்பருத்தி' தொடர் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட 1420 எபிசோடுகளை கடந்துள்ள இந்த தொடர் வருகிற ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்கான புரோமோ சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஜூலை 31 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடர் மாலை 5 மணியுடன் நிறைவு பெறும். மேலும், நேயர்கள் எதிர்பார்த்திராத வகையில் 16 திருப்பங்களுடன் ஜீ தமிழின் மற்ற சீரியல்களின் கதாநாயகிகளும் இந்த பிரம்மாண்ட கிளைமாக்ஸில் பங்கேற்க உள்ளனர். இதனால் செம்பருத்தி தொடரின் கிளைமாக்ஸ் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.