ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழில் ரன், சண்டக்கோழி உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் ஆதரவு பெற்ற நடிகையாக வலம் வந்தார் மலையாள நடிகை மீரா ஜாஸ்மின். சினிமாவில் பீக்கில் இருக்கும்போதே மாண்டலின் ராஜேஷ் என்பவருடன் காதல் வயப்பட்டதாக கிசுகிசுக்கள் வெளியாகின. இதை உறுதிப்படுத்துவது போல் இருவரும் சில நிகழ்ச்சிகளில் இணைந்தும் பங்கேற்றனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக கடந்த 2014ஆம் வருடம் அனில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கி அதிர்ச்சி அளித்தார் மீராஜாஸ்மின்.
அதைத்தொடர்ந்து அடுத்த இரண்டு வருடங்களிலேயே மீரா ஜாஸ்மின் அவர் கணவரை விட்டு பிரிகிறார் என்கிற செய்தியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதுபற்றி இப்போது வரை மீரா ஜாஸ்மின் எந்தவிதமான கருத்தும் கூறவில்லை. அதேசமயம் மீண்டும் தற்போது சினிமாவில் நடிப்பதற்காக மும்முரமாக களமிறங்கியுள்ளனர் மீரா ஜாஸ்மின். மேலும் இதுவரை இல்லாத வகையில் தனது கவர்ச்சி புகைப்படங்களையும் சோசியல் மீடியாவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இதற்கிடையே மலையாள இயக்குனர் அருண் கோபியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், பிரபல நடிகர் நரேனுடன் மீரா ஜாஸ்மின் ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டதன் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவு செய்துள்ளார். நரேனை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருப்பது போன்ற பல புகைப்படங்களை பகிர்ந்து, ‛மீண்டும் இணைவது உங்கள் பாதையை ஒளிரச் செய்யும். அரவணைப்பு மற்றும் மென்மையும் அனுபவிக்க வைக்கிறது. அந்த பொக்கிஷமான நிகழ்வுகள் மீண்டும் எழும்பியதற்கு நன்றி அன்பே நரேன்' எனவும் பதிவிட்டுள்ளார். இவரது பதிவு வைரலாகியுள்ளது.