தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் | எம்புரான் சர்ச்சையால் விருது குழுவால் புறக்கணிக்கப்பட்ட ஆடுஜீவிதம் : ஊர்வசி குற்றச்சாட்டு | தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் | விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே | கமல்ஹாசன் வாழ்த்தினார் : மற்றவங்க தேசிய விருது பெற்றவர்களை பாராட்டாத சினிமாகாரர்கள் |
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக இருப்பவர் சமந்தா. தற்போது தமிழில் விஜய்யின் 67வது படத்தில் நடிக்க அவருடன் பேசி வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் தெலுங்கில் 'சகுந்தலை, யசோதா,' என இரண்டு படங்கள் அவரது நடிப்பில் இந்த வருடத்தில் வெளியாக வாய்ப்புள்ளது.
கடைசியாக ஒரு மாதத்திற்கு முன்பாகத்தான் தனிப்பட்ட பதிவுகளைப் பதிவிட்டார். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு விளம்பரப் பதிவை மட்டும் பதிவிட்டிருந்தார். அடிக்கடி விதவிதமான பதிவுகளை, புகைப்படங்களுடன் பதிவிட்டு ஆக்டிவ்வாக இருந்தவர் திடீரென ஒதுங்கியது பலரை ஆச்சரியப்படுத்தியது.
நாக சைதன்யா, சோபியா துலிபல்லா இடையிலான எழுந்த காதல் கிசுகிசுவை சமந்தா தரப்புதான் பரப்பி விட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அதனால், சமந்தா இப்படி இடைவெளி விட்டிருக்கலாம் என்கிறார்கள்.
அந்த இடைவெளிக்குப் பிறகு நேற்று இன்ஸ்டா ஸ்டோரியில் 'காபி வித் கரன்' நிகழ்ச்சி பற்றிய வீடியோ ஒன்றையும், அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாருடனும் ஒரு போட்டோவைப் பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சி வியாழக்கிழமையன்று இரவு 7 மணிக்கு ஓடிடி தளத்தில் முதல் முறை ஒளிபரப்பாக உள்ளது.