அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு |
தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களாக நடிக்க தொடங்கி, பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படத்தில் ரஜினியின் நண்பராக நடித்து ரசிகர்களின் கவனத்திற்கு வந்தார் கவுண்டமணி. அப்படி நடிக்க தொடங்கியவர் ஒரு கட்டத்தில் செந்தில் உடன் காமெடி கூட்டணி அமைத்து ஏராளமான படங்களில் நடித்தார்.
கவுண்டமணி -செந்தில் காமெடி இல்லாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு 1980க்கு பிறகு 2000 வரை அதிகமான படங்களில் நடித்து வந்தார் கவுண்டமணி. இரண்டாயிரத்து பிறகு அவருக்கான பட வாய்ப்புகள் குறைந்த போதும் அவ்வப்போது ஒரு படத்தில் நடித்துக் கொண்டு வந்தார். கடைசியாக 2016 ல் வாய்மை என்ற படத்தில் நடித்திருந்தார் கவுண்டமணி. அதன் பிறகு கடந்த சில ஆண்டுகளாக அவர் ஓய்வில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் மீண்டும் கவுண்டமணி நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் அவர் சிவகார்த்திகேயனின் பெரியப்பாவாக ஒரு காமெடி கலந்த குணச்சித்திர வேடத்தில் நடிக்கிறாராம். இப்படத்தில் கவுண்டமணி நடிக்க வேண்டும் என்பதற்காக அவரை நேரில் சென்று சந்தித்து அழைப்பு விடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். மாவீரன் படத்தில் கவுண்டமணி நடிப்பது குறித்த தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று கூறப்படுகிறது.