69வது படம் : வினோத்திற்கு விஜய் போட்ட உத்தரவு | அஜித், கமல் வழியைப் பின்பற்றுவார்களா ரஜினி, விஜய்? | கிடைத்த வாய்ப்பை மிஸ் பண்ணிவிட்டேன்: அஜித் உடன் இணைவது குறித்து விஷ்ணுவர்தன் தகவல் | நவ., 22ல் ரிலீஸாகும் மிருணாள் குல்கர்னியின் ‛தாய் ஆகர்' | முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நடிகை கஸ்தூரி | பாலகிருஷ்ணாவிடம் சூர்யாவை மாட்டி விட்ட கார்த்தி | குபேரா படம் பற்றி ராஷ்மிகா வெளியிட்ட அப்டேட் | 2024 - தீபாவளி படங்கள் கற்றுத் தந்த பாடம் என்ன? | 'புஷ்பா 2' பதிவுகளை புறக்கணிக்கும் தேவி ஸ்ரீ பிரசாத் | விடை பெற்றார் நடிகர் டெல்லி கணேஷ் ; வான் படை சார்பில் அஞ்சலி : உடல் தகனம் |
தமிழில் ரன், பையா, சண்டக்கோழி என ஆக்சன் படங்களை மாஸாகவும் ஸ்டைலிஷ் ஆகவும் கொடுத்தவர் இயக்குனர் லிங்குசாமி. தற்போது தெலுங்கில் என்ட்ரி கொடுத்துள்ள லிங்குசாமி, தெலுங்கு இளம் முன்னணி ஹீரோவான ராம் கதாநாயகனாக நடித்துள்ள வாரியர் என்கிற படத்தை இயக்கியுள்ளார். கீரீத்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ள இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் வெளியாகி உள்ளது.
அதேசமயம் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு அதாவது அஞ்சான் படத்தின் தோல்விக்குப் பிறகு லிங்குசாமியின் பயணத்தில் ஒரு தொய்வு ஏற்பட்ட நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனனை வைத்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் தெலுங்கு, தமிழ் என இருமொழி படம் இயக்குவதாக லிங்குசாமி அறிவித்து அதன் துவக்க விழா பூஜை கூட சென்னையில் நடைபெற்றது. ஆனால் அதன் பிறகு வருடங்கள் பல கடந்தும் அந்த படம் என்ன ஆயிற்று என்கிற தகவல் தெரியவில்லை.
இந்த நிலையில் வாரியர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய லிங்குசாமியிடம் இது பற்றி கேட்கப்பட்டபோது, “அல்லு அர்ஜுன் படம் கைவிடப்படவில்லை. அதே சமயம் அந்த படத்திற்கான சிறப்பான கதை இன்னும் முடிவாகவில்லை.. அதனால் தான் அந்தப்படம் தள்ளிப்போய்க்கொண்டு இருக்கிறது. நிச்சயம் அல்லு அர்ஜுன் படத்தை ஒருநாள் இயக்குவேன்” என்று கூறியுள்ளார் லிங்குசாமி.