சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இரு மொழிகளிலும் பல முன்னணி கதாநாயகர்களின் ஜோடியாக பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். 2020ம் ஆண்டு கவும் கிச்லு என்பவரைத் திருமணம் செய்து கொண்டு, கடந்த ஏப்ரல் மாதம் ஒரு ஆண் குழந்தைக்கும் தாயானார். தற்போது தனது குழந்தையின் வளர்ப்பில் கவனம் செலுத்தி வருகிறார் காஜல்.
அவர் கர்ப்பமடைந்ததும் தெலுங்கில் நடித்து வந்த 'ஆச்சார்யா' படத்திலிருந்து நீக்கப்பட்டார். படம் வெளிவந்த போது அவர் நடித்த சில காட்சிகளையும் நீக்கிவிட்டார்கள். இருப்பினும் தமிழில் அவர் முன்னர் நடித்த 'ஹே சினாமிகா' படம் வெளிவந்தது. இந்த வருடத்தில் காஜல் அகர்வாலின் ஒரே படமாக அந்தப் படம்தான் அமையும் எனத் தெரிகிறது.
தற்போது தமிழில் 'இந்தியன் 2' படத்தில் ஏற்கெனவே நடித்து வந்தார் காஜல். அப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாமல் உள்ளது. அடுத்த சில மாதங்களில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. இருப்பினும் காஜல் அகர்வாலே படத்தில் கதாநாயகியாக தொடர்வது சந்தேகம் என்கிறார்கள். அவருக்குப் பதிலாக வேறொரு கதாநாயகியைத் தேடி வருவதாகவும் சொல்கிறார்கள். அடுத்த சில மாதங்களுக்கு தனது குழந்தை வளர்ப்பில் மட்டுமே கவனம் செலுத்தி 2023ல்தான் புதிய படங்களில் நடிக்க காஜல் முன் வருவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.