பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை | சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனம் ஏன் ? | 'ஹீரோ மெட்டீரியல்' இல்லை என்ற கேள்வி... : அமைதியாக பதிலளித்த பிரதீப் ரங்கநாதன் | ஒரே நாளில் இளையராஜாவின் இரண்டு படங்கள் இசை வெளியீடு | நான் அவள் இல்லை : வித்தியாசமான கதாபாத்திரத்தில் நிகிலா விமல் | 27 வருடங்களுக்குப் பிறகு நாகார்ஜூனாவுடன் இணையும் தபு | பல்டி பட ஹீரோவின் படத்திற்கு சென்சாரில் சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய படக்குழு |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் வெளிவந்த படம் 'விக்ரம்'. இப்படம் வெளிவந்து ஐந்து வாரங்கள் முடிந்து ஆறாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இன்று ஓடிடி தளத்திலும் படம் வெளியாகிவிட்டது.
இருப்பினும் தமிழகம், ஆந்திரா, கேரளா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பல தியேட்டர்களில் இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இது திரையுலகத்தினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஏற்கெனவே மொத்தமாக 400 கோடி வசூலைப் பெற்றுள்ள 'விக்ரம்' படம் இன்னும் அதிகபட்சமாக ஒரு வாரம் வரை தியேட்டர்களில் ஓட வாய்ப்பிருக்கிறது.
விஜய், அஜித் இருவர்தான் பாக்ஸ் ஆபீஸில் இப்போது அதிக வசூலைப் பெறுபவர்கள் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் சீனியர் நடிகரான கமல்ஹாசன் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளார். தமிழில் 200 கோடி வசூலை நெருங்கி வருவதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வசூலைக் கடக்குமா என்பது படம் ஓடி முடிக்கும் போதுதான் தெரியும்.