நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
ஜவுளிக்கடை அதிபர் சரவணன் முதன்முறையாக சினிமாவில் ஹீரோவாக நடித்துள்ள படம் 'தி லெஜண்ட்'. ஹிந்தி நடிகை ஊர்வசி ரவுட்டேலா நாயகியாக நடிக்க, மறைந்த நடிகர் விவேக், யோகிபாபு, பிரபு உள்ளிட்ட பல திரைநட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இரட்டை இயக்குனர்களாக ஜேடி - ஜெர்ரி இயக்கி உள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் படமாக உருவாகி உள்ளது.
எளிய மனிதன் தனது புத்திசாலித்தனத்தாலும், முயற்சியாலும், வலிமையாலும் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி 'ஒரு லெஜண்டாக' எப்படி உருவாகிறான் என்ற கருத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. ஏற்கனவே இந்த படத்திலிருந்து மொசலோ மொசலு, வாடிவாசல் பாடல்களும், டிரைலரும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28 அன்று வெளியாகவுள்ளது. இந்த படம் தமிழகத்தில் மட்டும் 800 தியேட்டர்களில் வெளியாகிறதாம். படத்தின் தமிழக உரிமையை கைப்பற்றி கோபுரம் சினிமாஸ் சார்பாக அன்புச்செழியன் வெளியிடுகிறார். ஒரு அறிமுக நடிகரின் படத்திற்கு இவ்வளவு தியேட்டரா என ஆச்சர்யப்பட்டு பார்க்கிறது தமிழ் திரையுலகம்.