தரன் தரும் தரமான இலக்கியம் | பிளாஷ்பேக்: காலம் கடந்தும் பேசப்படும் காவியப் படைப்பு “கண்ணகி” | ஜோதிடத்தை நம்பி படத்தை போட்ட வம்பு நடிகர் | கதை கேட்காமல் நடித்தேன்: 'சர்ப்ரைஸ்' தரும் சாயாதேவி | கந்தன் கருணை, ஆழ்வார், சர்கார் - ஞாயிறு திரைப்படங்கள் | தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு |
திரைப்பட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தொடர்ந்து மேடை நாடகங்களையும் நடத்தி வருகிறார். தற்போது சாருகேசி என்ற நாடகத்தை நடத்தி வருகிறார். கடந்த 26ம் தேதி இந்த நாடகம் நாரதகான சபாவில் நடந்தபோது ரஜினிகாந்த் தன் குடும்பத்தினருடன் நாடகத்தை பார்க்க சென்றார். கூட்டம் அதிகமாக இருந்ததால் நாடக குழுவை பாராட்ட முடியாமல் சென்று விட்டார். இதனால் நாடக நடிகர்களின் மனம் வருந்தப்பட்டிருக்கும் என்று கருதிய ரஜினி, நாடகத்தில் நடித்த அனைவரையும் தனது வீட்டிற்கு அழைத்து பாராட்டினார்.
இதுகுறித்து ஒய்.ஜி.மகேந்திரன் கூறியதாவது: உறவினர் என்பதை விட நல்ல நண்பராகத் தான் ரஜினிகாந்த் என்னோடு பழகி கொண்டு இருக்கிறார். குறிப்பாக எனது நாடகங்களுக்கு அவர் மிக பெரிய ரசிகர். சாருகேசி நாடகம் பற்றி நான் ஏற்கனவே அவரிடம் கூறியுள்ளேன். அவரது மனைவி மற்றும் மகளுடன் நாடகத்தை முழுமையாக பார்த்து நாடகம் முடிந்தவுடன் குழுவில் உள்ள அனைவரையும் வெகுவாக பாராட்டினார்.
இந்த நாடகத்தில் நான் மகேந்திரனை பார்க்கவில்லை, நடிகர் திலகம் சிவாஜி அவர்களை தான் பார்த்தேன் என்று கூறியதை விட பெரிய பாராட்டு எனக்கு வேறு எதுவும் இல்லை. மேலும் அன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் ரஜினிகாந்த் அவர்களால் அதிக நேரம் செலவிட முடியவில்லை. வீட்டுக்கு ஒரு நாள் அனைவரையும் அழைப்பதாக சொல்லி விட்டு சென்றார். சொன்னபடி எல்லோரையும் வீட்டுக்கு அழைத்து பாராட்டினார். என்றார்.