ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
மலையாள திரையுலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ஓரளவு பிரபலமானவர் நடிகர் தினேஷ் பிரபாகர். குறிப்பாக நிவின்பாலியுடன் இணைந்து நடித்த 1983 திரைப்படம் இவரை வெளிச்சம் போட்டு காட்டியது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான வலிமை படத்தில் படம் முழுவதும் வருகின்ற, வில்லனுக்கு துணைபோகும் போலீஸ் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தினேஷ் பிரபாகர். இந்தநிலையில் வரும் ஜூலை 1ஆம் தேதி மாதவன் நடிப்பில் வெளியாக இருக்கும் ராக்கெட்ரி ; தி நம்பி எபெக்ட் என்கிற படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் தினேஷ் பிரபாகர்.
இதற்கு முன்னதாக இயக்குனர் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் ஒரு வெப் தொடரில் நடித்திருந்தார் தினேஷ் பிரபாகர். அவரது நடிப்பை பார்த்த பிஜாய் நம்பியார் தான், ராக்கெட்ரி படக்குழுவினர் வைத்த ஆடிசனில் கலந்து கொள்ளுமாறு ஆலோசனை கொடுத்துள்ளார். அதுமட்டுமல்ல ஏற்கனவே பேமிலிமேன் வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்திற்காக இவரை தேர்வு செய்த காஸ்டிங் நிறுவனம் தான் இந்த படத்திற்கான ஆடிசனை நடத்தியது என்பதால் தனக்கு ராக்கெட்ரி படத்தில் நடிக்கும் வாய்ப்பு எளிதாக கிடைத்து விட்டது என்றும் கூறியுள்ளார் தினேஷ் பிரபாகர்.