கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! |
இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'யானை'. அருண் விஜய்க்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ், தலைவாசல் விஜய், ராதிகா யோகிபாபு, ராமச்சந்திர ராஜு, இமான் அண்ணாச்சி, புகழ், அபிராமி அம்மு ஆகியோர் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஜூலை 1-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது அருண் விஜய் படத்தை தீவிரமாக விளம்பரம் செய்யும் வேளைகளில் ஈடுபட்டு வருகிறார். தனது ரசிகர்களைச் நேரில் சந்தித்து அவர்களுடன் புகைப்படங்களை எடுத்து வருகிறார் .
இந்நிலையில் அருண் விஜய் படத்தின் ப்ரோமோஷனுக்காக மலேசியா சென்றுள்ளார். அப்படியே அங்குள்ள பிரபல பத்துமலை முருகன் கோவிலுக்கு சென்று யானை படம் வெற்றி பெற வேண்டி வழிபாடு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.