போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கியவர் பிரசாந்த் நீல். இவர் தற்போது பிரபாஸ் - ஸ்ருதிஹாசன் நடித்து வரும் சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. மேலும் இந்த படத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜ் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் தான் நடிப்பது குறித்து ஒரு பேட்டியில் பிருதிவிராஜ் கூறுகையில், பிரபாஸ் நடிக்கும் படம் என்பதால் சலார் பட வாய்ப்பை என்னால் தவிர்க்க முடியவில்லை. பல படங்களில் கேரக்டர் மற்றும் வில்லன் ரோல்களில் நடித்திருப்பதால் இந்தப்படத்தில் நடிக்கிறேன். அதோடு இந்த படத்தில் கமிட் ஆகும்போது இயக்குனர் இடத்தில் ஒரு கண்டிசன் போட்டேன். அதாவது, இந்த படம் எத்தனை மொழிகளில் வெளியானாலும் அத்தனை மொழிகளிலும் எனக்கான கேரக்டருக்கு நான் தான் சொந்தக்குரலில் டப்பிங் பேசுவேன் என்று கூறினேன். அதற்கு இயக்குனர் பிரஷாந்த் நீல் ஒப்புக் கொண்டார். அதன் பிறகே இப்படத்தில் கமிட்டானேன் என்று அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் நடிகர் பிரித்விராஜ் .