வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
திருப்பூர் பனியன் தொழிற்சாலையின் பின்னணியில் ஏற்கெனவே சில தமிழ் படங்கள் உருவாகி இருக்கிறது. தற்போது உருவாகும் படத்திற்கு குதூகலம் என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். ரேட் அண்ட் கேட் பிக்சர்ஸ் சார்பில் எம்.சுகின்பாபு தயாரிக்கிறார். காக்கி சட்டை, எதிர்நீச்சல், கொடி படங்களில் உதவி இயக்குனாக பணியாற்றிய உலகநாதன் சந்திரசேகரன் இயக்குகிறார்.
கதாநாயகனாக பாலமுருகன் அறிமுகமாகிறார். இவர் ஜோடியாக அம்மு அபிராமி நடிக்கிறார். கவிதாபாரதி, புகழ், பியான், சஞ்சீவி, மன்மோகித், பிரேமி, எம்.சுகின்பாபு உள்பட பலர் நடிக்கின்றனர். பியான் சர்ராவ் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு சுகுமாரின் உதவியாளர், மணிபெருமாள் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் உலகநாதன் சந்திரசேகரன் கூறியதாவது : இளைஞன் ஒருவன், தன் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்ற எடுக்கும் முயற்சிகளுக்கு இடையூறாக வரும் தடைகளை, எப்படி எதிர் கொள்கிறான் என்பது படத்தின் கதை. திருப்பூரின் அடையாளமாக விளங்கும் பனியன் தொழிலின் பின்னணியில், நகைச்சுவையுடன் படம் உருவாகிறது. என்கிறார்.