அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
தொண்ணூறுகளில் முன்னணி ஹீரோவாக நடித்து வந்த அர்ஜுன் தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் வில்லன் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இது ஒருபக்கம் இருக்க வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்சன் போன்ற வாரிசு நட்சத்திரங்கள் கதாநாயகிகளாக தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளனர்.
அந்தவகையில் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஷால் ஜோடியாக பட்டத்து யானை என்கிற படத்தில் அறிமுகமானார். அந்தப்படம் பெரிதாக வரவேற்பு பெறாத நிலையில் அர்ஜுனே தனது மகளை கதாநாயகியாக வைத்து சொல்லிவிடவா என்கிற படத்தை இயக்கினார். இருந்தும் ஐஸ்வர்யாவுக்கு பட வாய்ப்புகள் ஏதும் தேடி வரவில்லை.
இந்த நிலையில் தெலுங்கு திரையுலகில் மகளை அறிமுகப்படுத்தும் விதமாக தானே ஒரு படம் இயக்க மீண்டும் களம் இறங்கிவிட்டார் அர்ஜுன். கடந்த சில நாட்களுக்கு முன்பு இது குறித்து தகவல் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. தெலுங்கில் வளர்ந்து வரும் இளம் நடிகரான விஷ்வக் என்பவர் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் துவக்க விழாவில் கலந்துகொண்டு படப்பிடிப்பை துவங்கி வைத்துள்ளார் நடிகர் பவன் கல்யாண்.