ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் |
தமிழ்க் கலாச்சாரத் திருமணங்களில் திருமணத்தன்று மணப்பெண்ணுக்கு கொஞ்சம் தடிமனான மஞ்சள் கயிற்றில் செய்யப்பட்ட தாலியைத்தான் மணமகன் கட்டுவார். பிறகு நல்ல நாளில் அந்த புதுத் தாலியை மாற்றி தங்க செயினாகவோ அல்லது மெல்லிய கயிற்றிலோ 'தாலி பிரித்து' கோர்க்கும் வைபவத்தை பெரும்பாலான குடும்பங்களில் நடத்துவார்கள்.
நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் சமீபத்தில் காதல் திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றது. தற்போது இந்த புதுமணத் தம்பதியினர் தாய்லாந்தில் தேனிலவு கொண்டாடி வருகிறார்கள். அங்கு அவர்கள் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் விக்னேஷ் சிவன் ஏற்கெனவே வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் நயன்தாராவின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவப்பட்டு வருகிறது. அதில் கழுத்தில் புதுத் தாலியுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படமாக உள்ளது. பொதுவாக திருமணம் முடிந்த புதுப் பெண்கள், அதிலும் நடிகைகள் போன்று திரைப்பிரபலங்கள் வேலைக்குச் செல்லும் போது அந்தத் தாலியை ஆடைக்குள் மறைப்பது வழக்கம். தான் புதிதாகத் திருமணமான பெண் என காட்டிக் கொள்ள கூச்சப்படுவார்கள். ஒரு சில பெண்கள் மட்டுமே அந்த புதுத் தாலி தெரிந்தாலும் பரவாயில்லை எனச் செல்வார்கள்.
நடிகை நயன்தாரா தன்னுடைய புகைப்படங்களில் புதுத் தாலியை மறைத்துக் கொள்ளாமல் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார். தமிழகத்தின் மருமகளாக தமிழ்க் கலாச்சாரத்தை பாலோ செய்ய ஆரம்பித்துவிட்டார்.