300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
ஸ்டூடியோக கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த படம் மிஸ்டர் லோக்கல். இந்த படம் தோல்வியை தழுவியது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பேசப்பட்ட சம்பளம் தரப்படவில்லை. இது தொடர்பாக சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்தார். பதிலுக்கு தனது தரப்பு விளக்கத்தையும் கோர்ட்டில் முன் வைத்தார் ஞானவேல்ராஜா.
இந்த நிலையில் ஒரு பேட்டியில் ஞானவேல்ராஜா கூறியிருப்பதாவது: மிஸ்டர் லோக்கல் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு என ஒரு குறிப்பிட்ட தொகை பேசியிருந்தோம். எனக்கு அந்த சமயத்தில் பணப்பிரச்சினை இருந்தது. அதனால் அந்த சமயத்தில் சிவகார்த்திகேயனுக்கு கொடுத்த உறுதியை என்னால் காப்பாற்ற முடியவில்லை. அவரும் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்து வழக்கு தொடர்ந்து விட்டார்.
அவருக்கு கொடுக்க வேண்டிய சம்பள பணத்தில் 30 முதல் 40 சதவீதத்தை ஏற்கெனவே கொடுத்து விட்டோம். மீதியை இப்போது அவருக்குக் கொடுத்து வருகிறோம். ஆரம்பத்தில் எனக்கும் அவர் மீது கோபம் இருந்தது. அவருக்கு சேரவேண்டிய பணத்தைத்தானே கேட்கிறார் என்று நினைத்து அமைதியாகிவிட்டேன். இது விஷயமாக சிவகார்த்திகேயனை தொடர்பு கொள்ள முயற்சித்தேன் முடியவில்லை. வருங்காலத்தில் அவராக தேதி கொடுத்தால் அவரை வைத்து படம் எடுப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்று கூறியுள்ளார் ஞானவேல்ராஜா.