நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

திரைப்பட வெளியீட்டு நாட்களில் முக்கியமான நாள் தீபாவளி. அன்றைய தினம் தங்களது படங்கள் வெளியாக வேண்டும் என்று பலரும் நினைப்பார்கள். திரைப்படம் பார்ப்பதும் தீபாவளிக் கொண்டாட்டங்களில் ஒன்றாக ரசிகர்களுக்கு இருக்கும்.
இந்த வருட தீபாவளிக்கு கார்த்தி நடிக்கும் 'சர்தார்' படம் வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பிரின்ஸ்' படமும் அன்றைய தினம் வெளியாகும் என தற்போது அறிவித்துள்ளார்கள். முதலில் 'பிரின்ஸ்' படத்தை ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள். அதிலிருந்து மாற்றி இப்போது தீபாவளிக்கு வெளியீடு என்று அறிவித்துள்ளார்கள்.
கார்த்தி நடிக்கும் 'சர்தார்' படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது. சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பிரின்ஸ்' படத்தை மதுரை அன்புசெழியனின் கோபுரம் சினிமாஸ் வெளியிடுகிறது. இவர்கள் இருவருமே தமிழ் சினிமாவிலும், தமிழக தியேட்டர் வட்டாரங்களிலும் ஆதிக்கம் மிக்கவர்கள். அதனால், தங்களது படங்களுக்காக தீபாவளி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்துத் தியேட்டர்களையும் இப்போதே 'பிளாக்' செய்துவிட்டிருப்பார்கள்.
அதனால், தீபாவளி வெளியீடாக வேறு படங்கள் வர வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.