பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் |
தமிழ் சினிமாவின் 100 ஆண்டு காலத்திற்கும் மேலான வரலாற்றில் 'விக்ரம்' படம் புரிந்த வசூல் சாதனையை கோலிவுட் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் 'இண்டஸ்ட்ரி ஹிட்' என்ற ஒரு வார்த்தை அடிக்கடி அடிபட்டுக் கொண்டிருக்கிறது. அதாவது இதுவரை வந்த படங்களில் 'விக்ரம்' படம்தான் நம்பர் 1 ஹிட் என்பதன் அர்த்தமாகவும் அதை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு முன்பு 'பாகுபலி 2' படம் தமிழகத்தில் 152 கோடி ரூபாய் வசூலைப் பெற்றதுதான் நம்பர் 1 வசூலாக இருந்தது. அதை 17 நாட்களில் 'விக்ரம்' படம் முறியடித்திருக்கிறது.
அதே சமயம் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த '2.0' படம் மொத்தமாக 800 கோடி வரை வசூலித்ததாகச் சொல்கிறார்கள். 600 கோடி ரூபாய் செலவில் தயாரான '2.0' படம் 800 கோடி ரூபாய் வசூலித்ததாகச் சொல்லப்பட்டாலும் அப்படம் தந்த லாபம் மிகமிகக் குறைவு. தமிழில் 'இண்டஸ்ட்ரி ஹிட்' என்பதை தற்போது அதிக லாபம் மூலம் 'விக்ரம்' படம் பிடித்துள்ளது. தெலுங்கில் 'பாகுபலி 2', ஹிந்தியில் 'டங்கல்', கன்னடத்தில் 'கேஜிஎப் 2', மலையாளத்தில் 'புலி முருகன்' ஆகியவை 'இண்டஸ்ட்ரி ஹிட்' ஆக உள்ளன.
'விக்ரம்' படத்தின் பட்ஜெட் அதிக பட்சமாக 150 கோடி என்று கணக்கிட்டாலும் அப்படத்தின் வசூல் தற்போது 350 கோடியைத் தாண்டியுள்ளது. வசூல் நிறைவடையும் போது 400 கோடியை நிச்சயம் தாண்டிவிடும். மேலும், ஓடிடி, சாட்டிலைட் உரிமை, இதர உரிமைகள் என மொத்தமாக 400 கோடி லாபத்தைக் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.
கதாநாயகி இல்லாமல், கிராபிக்ஸ், விஎப்எக்ஸ் காட்சிகள், நகைச்சுவைக் காட்சிகள் இல்லாமல் வெளிவந்த 'விக்ரம்' படம் தமிழ் சினிமா ரசிகர்களை இந்த அளவிற்கு ஈர்த்துள்ளதன் காரணத்தை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.