எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
ஏவிஎம் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், ஸ்ரேயா, சுமன், விவேக், மணிவண்ணன், வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்த படம் சிவாஜி. 2007ம் ஆண்டு ஜுன் மாதம் 15ம் தேதி இப்படம் வெளிவந்தது. இப்படம் வெளிவந்து 15 ஆண்டுகள் ஆகிறது. இந்தப் படம் தான் தமிழ் சினிமாவை உலக அரங்கில் இன்னும் அதிகமாகப் பரவச் செய்தது. அமெரிக்காவில் ஒரு தமிழ்ப் படத்திற்கு முதன் முதலில் கிடைத்த அதிக வரவேற்பு இந்தப் படத்தில் இருந்துதான் ஆரம்பமானது.
சிவாஜி படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதையொட்டி நடிகர் ரஜினியை அவரது இல்லத்தில் தனது மகள் அதிதி உடன் சென்று பார்த்தார் ஷங்கர். அதுபற்றி, ‛‛சிவாஜி படத்தில் ரஜினி உடன் இணைந்து பணி செய்தது மறக்க முடியாத அனுபவம். அவரது ஆற்றல், பாசம் அனைத்தும் எனது நாட்களை இனிமை ஆக்கியது'' என கூறியிருந்தார்.
இந்நிலையில் சிவாஜி படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனத்தாரின் ஏவிஎம் சரவணன், எம்.எஸ்.குகண், அருணா குகண் ஆகியோர் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். சிவாஜி 15 ஆண்டை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ்ந்தது.