பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு |
கமல் - ஷங்கர் கூட்டணியில் 1996ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் படம் ‛இந்தியன்'. அதன் காரணமாகவே 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கமல் - ஷங்கர் கூட்டணியில் இந்தியன்- 2 படப்பிடிப்பு தொடங்கப்பட்டபோது படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனபோதிலும் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட சில விபத்துக்கள் காரணமாக படம் தாமதமாகி வந்தது.
இந்தநிலையில் படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம் மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோருக்கிடையே ஏற்பட்ட சில மனக்கசப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதையடுத்து ராம்சரண் நடிக்கும் படம் குறித்த தகவலை ஷங்கர் அறிவித்தபோது, இந்தியன்-2 படத்தை முடித்த பிறகுதான் வேறு படத்தை ஷங்கர் இயக்க வேண்டும் என்று அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது லைக்கா நிறுவனம். இந்த விவகாரம் பெரிய அளவில் வெடித்தது. இதனால் கமல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்க தொடங்கினார்.
ஷங்கர், ராம் சரண் நடிக்கும் படத்தில் கவனத்தை திருப்பினார். இதன் காரணமாக இந்தியன்-2 கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்தியன்- 2 படப்பிடிப்பு சம்பந்தமான பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது கமலும் இந்தியன்-2 குறித்து ஒரு அப்டேட் வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், தற்போது ஷங்கர் ராம்சரணை வைத்து இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இந்தியன்-2 படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு, இந்தியன்- 2 படத்திற்காக ரசிகர்களை போலவே நானும், ஷங்கரும் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆக, இந்தியன்-2 படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதை உறுதிப்படுத்தி விட்டார் கமல்.