மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
தெலுங்கில் சாய்பல்லவி - ராணா நடிப்பில் உருவாகியுள்ள விராட பருவம் திரைப்படம் நாளை (ஜூன் 17) வெளியாக இருக்கிறது. வேணு உடுகுலா என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சாய்பல்லவி ஒரு நக்சலைட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் பல வருடங்களுக்கு முன் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று முன்பே படக்குழுவினரால் சொல்லப்பட்டு வந்தது.
ஜெய்பீம் படத்தில் அந்த கதை உருவாக காரணமாக இருந்த செங்கனி கதாபாத்திரத்தை எப்படி அந்த படம் வெளியான சமயத்தில் வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தினார்களோ அதேபோல இந்த படத்தில் சாய்பல்லவி ஏற்று நடித்துள்ள வெண்ணிலா என்கிற நிஜ கதாபாத்திரத்தை நேற்று படக்குழுவினர் அறிமுகப்படுத்தினார்கள்.
ஆந்திராவில் உள்ள வாரங்கல் பகுதியைச் சேர்ந்த வெண்ணிலா என்பவரின் வாழ்க்கையில் நடந்த மிக கொடூரமான நிகழ்வுகளை மையப்படுத்தி தான் இந்தப்படம் உருவாகி உள்ளது. இந்த படம் உருவாக காரணமான நிஜ நாயகியான வெண்ணிலாவை படத்தின் நாயகி சாய்பல்லவி நேற்று நேரில் சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பின்போது நாயகன் ராணா மற்றும் படக்குழுவினர் ஆகியோரும் உடனிருந்தனர்.