குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் அப்டேட் | ஸ்ருதி நாராயணனின் இன்ஸ்டா பதிவு | சிக்கந்தர் - மோசமில்லாத முதல் நாள் வசூல் | மாஸ்க், தொப்பி அணிந்தபடி டேட்டிங் செல்லும் விஜய்தேவர கொண்டா - ராஷ்மிகா | ரிலீஸிற்கு முன்பே பார்த்திருந்தால் மோகன்லால் அனுமதித்திருக்க மாட்டார் : மேஜர் ரவி கருத்து | தல வருகிறார், அவரை பாருங்கள் : அருண் விஜய் வெளியிட்ட பதிவு | ஏற்றி விட்ட ஏணியை மறந்து போன நடிகர்கள் : பாவமில்லையா பாரதிராஜா...! | மேலிடத்து உத்தரவு... கால்ஷீட் தராத தனுஷ் : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | கண்ணப்பா ரிலீஸ் தள்ளிப்போனது : காரணம் இது தான் | விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் |
ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் அட்லீ இயக்கி வரும் படம் ஜவான். இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த டீசருக்கு சினிமா வட்டாரங்களில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அதேசமயம் இந்த டீசரில் ஷாருக்கான் முகம் முழுவதும் பேண்டேஜ் சுற்றியபடி காட்சியளிக்கிறார். அதை பார்த்து, இது கடந்த 1990ம் ஆண்டு வெளியான டார்க் மேன் என்ற ஹாலிவுட் படத்தின் தோற்றத்தை போன்று இருக்கிறது. அதனால் வழக்கம் போல் இந்த படத்திலும் அட்லீ காப்பி அடித்திருக்கிறார் என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அட்லீ இயக்கிய தெறி, மெர்சல் படங்களில் நடித்த சமந்தா இந்த ஜவான் டீசர் குறித்து சோசியல் மீடியாவில் ஒரு கருத்து வெளியிட்டுள்ளார். அதில், ஜவான் டீசர் பயங்கரமாக உள்ளது. அட்லீயை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்று தெரிவித்திருக்கிறார். தற்போது சமந்தாவின் இந்த பதிவும் வைரலாகி வருகிறது. மேலும் இந்த ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக முதலில் அட்லீ தேர்வு செய்தது சமந்தாவைதான். ஆனால் அவர் வேறு சில தெலுங்கு படங்களில் கமிட்டாகியிருந்ததால் அடுத்த ஆப்ஷனாக நயன்தாராவை ஒப்பந்தம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜவான் படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 2ம் தேதி திரைக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.