பாடல்கள் ஹிட்டாவதற்கு 'ரீல்ஸ்' வீடியோக்கள்தான் முக்கியமா? | ரஷ்மி முரளி: தோழி நடிகையைத் தேடிய ரசிகர்கள் | விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்… | விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே |
2022ம் ஆண்டிற்கான புதுப் படங்களின் வெளியீடுகளை அந்தந்த தயாரிப்பாளர்கள் சரியாக திட்டமிட்டுள்ளதாகவே தெரிகிறது. அடுத்த வரும் முக்கிய விடுமுறை நாட்களான சுதந்திர தினம், வினாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய நாட்களில் எந்தெந்த படங்கள் வெளிவரப் போகிறது என்பது திரையுலகில் முக்கிய படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துவிட்டார்கள்.
முன்பெல்லாம் பட வெளியீட்டுத் தேதிகளை அறிவிக்க மிகவும் தயங்குவார்கள். ஆனால், இப்போது படம் வெளியாவதற்கு சில பல மாதங்களுக்கு முன்பே வெளியீட்டுத் தேதியை அறிவிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
வினயாகர் சதுர்த்தி தினத்தன்று கார்த்தி, அதிதி ஷங்கர் நடித்துள்ள 'விருமன்' படம் வெளியாகும் என ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள். அதே நாளில் சிவகார்த்திகேயனின் 20வது படமும் வெளியாகும் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். இப்படத்திற்கு இன்னும் பெயரே வைக்கவில்லை. அதற்குள் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது ஆச்சரியம்தான்.
கார்த்தியும், சிவகார்த்திகேயனும் முருகக் கடவுளின் பெயர்கள். முருகனின் பெயர் கொண்ட இருவரும் அண்ணன் வினாயகரின் பிறந்தநாளன்று இப்படி மோதிக் கொள்வது சரியா ?.