'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
இயக்குனர் விக்னேஷ் சிவன், பாடலாசிரியராகவும் பணியாற்றி வருகிறார். கடந்த 2014ல் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், விவேக், சமுத்திரகனி, சரண்யா நடித்த ‛வேலையில்லா பட்டதாரி' படத்தில் தனுஷ் உடன் பணிபுரியும் சிவில் இன்ஜினியராக சிறிய ரோலில் நடித்தார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் இந்த அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் இப்போது விக்னேஷ் சிவன் கூறியிருப்பதாவது : ‛‛எனக்கு நடிப்பில் பெரிதாக ஆர்வமில்லை. வேலையில்லா பட்டதாரி படத்தில் விருப்பமில்லாமல் தான் நடித்தேன். அந்த கதாபாத்திரத்தில் வேறொருவர் நடிக்க வேண்டியது. அன்றைக்கு அவர் வரவில்லை. வேறு வழியின்றி நான் தான் நடிக்கணும் என தனுஷ் அந்த ரோலில் என்னை நடிக்க வைத்தார்'' என்றார்.