'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
சென்னை : தமிழ் சினிமாவில் பன்முக படைப்பாளி டி.ஆர். எனும் டி.ராஜேந்தர். நடிகர், இயக்குநர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். அரசியலிலும் தனது திறமையை நிரூபித்தவர். கடந்தவாரம் திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சுவலி காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவரது வயிற்றில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உயர்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அவரை வெளிநாடு கூட்டிச் சென்று சிகிச்சை செய்யும் எண்ணத்திலும் உள்ளார் அவரது மகனும், நடிகருமான சிம்பு.
இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள டி.ராஜேந்தரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்துள்ளார். தொடர்ந்து மருத்துவர்களிடம் தேவையான சிகிச்சையையும் அளிக்கும்படி அறிவுறுத்தி உள்ளார்.