அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் |

கமல் இப்போது அரசியல் பணிகளை குறைத்துக் கொண்டு தீவிரமாக சினிமா மற்றும் தொலைக்காட்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். இதன் ஒரு பகுதியாக பிக் பாஸ் 6வது சீசனிலும் கவனம் செலுத்தி வருகிறார். சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கி உள்ளன. புரொமோஷன் நிகழ்ச்சிக்கான போட்டோஷூட் உள்ளிட்ட பணிகளுக்காக கமல்ஹாசன் கலந்து கொண்டு வருகிறாராம்.
இன்னொரு பக்கம் பங்கேற்பாளர்கள் தேர்வு மும்முரமாக நடந்து வருகிறது. நடந்து முடிந்த 5வது சீசனில் முக்கிய நடிகர், நடிகைகள் இல்லை என்கிற குறை இருந்தது. அதனால் இந்த முறை பிரபலமானவர்களை களம் இறக்க முடிவு செய்து அதற்கான பணிகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு சீசனிலும் பரபரப்புக்கு ஒருவரை தேர்வு செய்து களத்தில் இறக்குவார்கள். வனிதா, பாலாஜி மனைவி நித்யா மாதிரியான மீடியா கவனம் உள்ளவர்களை தேர்வு செய்வார்கள்.
அந்த வரிசையில் இந்த சீசனில் சமீபத்தில் விவாகரத்தாகி உள்ள இசை அமைப்பாளர் இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட்டை களம் இறக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். ஆனால் அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை எதுவும் உறுதியில்லை என்கிறார்கள்.