நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் வாழ்க்கை சினிமா மினிமம் கியாரண்டி படங்களாக உருவெடுத்திருக்கிறது. டோனி, சச்சின் டெண்டுல்கர், கபில்தேவ் உள்ளிட்டவர்களின் வாழ்க்கை சினிமா ஆகியிருக்கிறது. இந்த வரிசையில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கையும் சினிமா ஆகிறது.
இவரது படத்தை இயக்கப்போவது ரஜினியின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா என்ற தகவல் பரவி உள்ளது. தற்போது ஐஸ்வர்யா பிசிசிஐ தலைவராக இருந்து சவுரவ் கங்குலி நடத்தும் ஐபிஎல் போட்டியை காண தனது மகன்களுடன் கோல்கட்டா சென்றுள்ளார். அங்கு கங்குலி நடத்திய விருந்திலும் கலந்து கொண்டுள்ளார். இதை வைத்துக் கொண்டு இந்த தகவல்கள் பரவி இருக்கிறது. ஆனால் இதனை ஐஸ்வர்யா இதுவரை மறுக்கவில்லை.
தனுஷ் நடித்த 3, கவுதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை படங்களின் மூலம் தன்னை திறமையான இயக்குனர் என்று நிரூபித்தவர் ஐஸ்வர்யா. தற்போது அவர் ஓ சாதிசால் என்ற பாலிவுட் படத்தை இயக்கி வருகிறார்.